
Vijay Hazare Trophy: Tamil Nadu have the edge against Saurashtra in semis (Image Source: Google)
விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கான இறுதிக்கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கால் இறுதி போட்டிகள் முடிந்தது.
அதன்படி தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. இதில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி இறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.