
Vijay Hazare Trophy: Washington Sundar's fifer helps TN restriect Puducherry by 225 runs (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய புதுச்சேரி அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 75 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபபித் அஹ்மத் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 87 ரன்கள் எடுத்திருந்த அஹ்மத் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.