
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி அதிக சதங்கள்(100 சதங்கள்), அதிக ரன்கள் என பல்வேறு பேட்டிங் சாதனைகளை படைத்து தன்னிகரில்லா தலைவனாக இருந்து வருகிறார்.
அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 43 ஒருநாள் சதங்கள் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள் என மொத்தம் 70 சதங்களை குவித்துவிட்டார். எனவே அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதும், இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.