
Virat Kohli, Anushka Sharma Salute Frontline Workers For Their Spirit, Dedication Amid Covid Crisis (Image Source: Google)
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட உள்ளார்.
இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்கள். மேலும் இருவரும் இணைந்து கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.