
லாா்ட்ஸ் டெஸ்டின்போது பிசிசிஐ சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, துணைத் தலைவா் ராஜீவ் சுக்லா ஆகியோா் கேப்டன் கோலியுடன் உலகக் கோப்பை போட்டிக்கான வியூகம் குறித்து ஆலோசித்துள்ளனா். அதில், ஒரு கேப்டனாக கோலியின் பொறுப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கு கொஞ்ச காலமே இருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டியை தவிா்த்து இந்திய அணி வீரர்கள் வேறு எந்தவொரு போட்டிகளும் இல்லாததால் உலகக் கோப்பைக்கான தயாா் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.
கோலியின் தலைமையிலான இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்திலும், 2019 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியிலும், இந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளது. ஐசிசியின் போட்டிகளில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுவது, இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தும் விவகாரமாக உள்ளது.