Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை மகுடங்களை சூடிய கோலி !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் விராட் கோலி மேலும் சில சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisement
virat-kohli-becomes-42nd-batsman-in-world-and-6th-indian-to-score-7500-runs-in-test-cricket-at-wtc-f
virat-kohli-becomes-42nd-batsman-in-world-and-6th-indian-to-score-7500-runs-in-test-cricket-at-wtc-f (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2021 • 10:11 AM

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை இந்தியா எடுத்தது. இதில் விராட் கோலி 44 ரன்களும், ரஹானே 29 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2021 • 10:11 AM

இந்த நிலையில் இப்போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சில சாதனைகளை தர்த்தும், புதிய சாதனையை படைத்தும் உள்ளார். 

Trending

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை அண்டர் 19, ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகிய தொடர்கள்தான் ஐசிசியால் நடத்தப்பட்டு வந்தன.

இந்த அனைத்து தொடர்களின் இறுதிப்போட்டியிலும் விராட் கோலி விளையாடியுள்ளார். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் அவர் விளையாடி வருவதால், ஐசிசி நடத்திய அனைத்து தொடர்களின் இறுதிப்போட்டியிலும் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

அதேபோல் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கோலி செயல்படுவதன் மூலம், இந்திய அணிக்காக அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இச்சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரன் சிங் தோனி பெற்றிருந்தார்.

அதேபோல் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை (92 இன்னிங்ஸ்) கடந்து புதிய மைல்கல்லை கோலி எட்டியுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த பட்டியலில் சர்வதேச அளவில் 9-வது இடத்தையும் விராட் கோலி பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement