
Virat Kohli Becomes Most Capped Indian Test Captain (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு இது 61ஆவது டெஸ்ட் ஆட்டம்.
இதன்மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.