
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது பல்லகலே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பத்து வீசுவதாக தீர்மானம் செய்தது. கடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இன்று அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி முடித்துள்ள நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய நட்சத்திர வீரர்கள் போட்டியின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து கைக்கு வந்த எளிதான கேட்ச்களை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.