
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வரும் விராட் கோலி தற்போது பேசுபொருளாகி வருகிறார். காரணம் இந்திய கிரிக்கெட்டிலேயே தற்போது பணக்கார வீரராக வலம் வருபவர் விராட் கோலி. பல வணிக நிறுவனங்களை நடத்தி வரும் விராட் கோலி சமூக வலைத்தளம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வலம் வந்தது.
ஆனால் இதற்கு விராட் கோலி அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து எது போட்டாலும் மக்கள் படிப்பார்கள் என்று எண்ணிய ஒரு செய்தி நிறுவனம் விராட் கோலி ஒரு பெரிய பங்களாவை மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கி இருப்பதாகவும் அங்கு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.
இதனை பலரும் நம்பி இருந்த நிலையில், அதனையும் தற்போது விராட் கோலி மறுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் உடனடியாக பதிவு ஒன்றைப் போட்ட விராட் கோலி, தாம் சிறுவயதிலிருந்து படிக்கும் ஒரு செய்தித்தாளில் இப்படி பொய் செய்தி வெளியிடுவார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று போட்டிருந்தார்.