
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக தான் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது விராட் கோலிக்கு வாய்ப்புள்ளதா என்பது தான். கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாமல் இருக்கும் அவர், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் ஓய்வு கேட்டு பெற்றார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி இடம்பெறுவதற்கு உள்ள கடைசி வாய்ப்பு ஆகஸ்ட் 27ல் தொடங்கவுள்ள ஆசியக்கோப்பை தொடர் மட்டுமே ஆகும். அதில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஓய்வில் இருக்கும் கோலி நேரடியாக ஆசியக்கோப்பை தொடருக்கு வந்துவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.