
2022ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் இன்று தொடங்குகிறது. மும்பையில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதையடுத்து நாளை 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த இரு போட்டிகளிலும் ஒரு விசேஷம் ஒளிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி துறந்துள்ளார். அதேபோல பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியுள்ளார். இருவரது ரசிகர்களும் இதனால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இரு அணிகளும் அடுத்தடுத்த நாட்களில் தங்களது முதல் போட்டியில் ஆடவுள்ளன.
இந்தப் போட்டி குறித்தும், ஐபிஎல் தொடர் குறித்தும் விராட் கோலி மிகவும் பரவசமாக உள்ளார் என்பதை அவரே ஒரு டிவீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோலி போட்டுள்ள டிவீட்டில், போட்டி நாள் நெருங்கி விட்டது. ஐபிஎல் தொடர்பான பரவசமும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. இந்த எதிர்பார்ப்பை விரும்புகிறேன். வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல உள்ளளது என்று கூறியுள்ளார் விராட் கோலி.