
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இப்போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடியாக வேண்டும். மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய சிறந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இப்போட்டியில் வெற்றி பெற முடியும்.
இன்னிலையில் சவுத்தாம்ப்டன் மைதானம் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தால் இந்திய கேப்டன் விராட் கோலி நிச்சயம் திணறுவார் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து கூறியுள்ளார்.