
Virat Kohli named Wisden Almanack's ODI cricketer of the 2010s (Image Source: Google)
இந்திய அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழ்பவர் விராட் கோலி. இதுவரை இந்திய அணிக்காக 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 43 சதம், 62 அரைசதங்களுடன் 12,169 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தசாப்தத்தின் விஸ்டனின் அல்மனாக் ஒருநாள் கிரிக்கெட் வீராரகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்து விளங்கியதற்காக விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் ஐசிசி தசாப்தத்திற்கான சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய விருதுகளை தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.