
Virat Kohli pays his tributes to Shane Warne (Image Source: Google)
கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52) மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் நேற்று காலமானார்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலர் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன் இறங்கலை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ வாழ்க்கை கணிக்கமுடியாதது. நிலையற்றது. களத்தில் சிறந்த வீரராகவும் வாழ்க்கையில் நல்ல மனிதராகவும் இருந்த வார்னேவின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.