
ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவரின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஃபார்ம் அவுட் காரணமாக ஓய்வில் இருந்த கோலி, ஆசிய கோப்பை தொடருக்கு நேரடியாக வந்துள்ளார். இதில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இனி டி20 அணியில் வாய்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள கோலி, " தோனியின் மிகவும் நம்பிக்கையான துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும்.