Advertisement

விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 24, 2021 • 22:34 PM
Virat Kohli Shares Experiences From Younger Days With Me, Says Shubman Gill
Virat Kohli Shares Experiences From Younger Days With Me, Says Shubman Gill (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தொடக்க வீரராக களமிறங்கவுள்ள சுப்மன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவுக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கில் 378 ரன்கள் எடுத்திருக்கிறார். 

Trending


இந்த நிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள சுப்மன் கில், "கேப்டன் விராட் கோலியுடன் நான் போட்டிகள் குறித்து பேசும் போதெல்லாம், என்னை அச்சமின்றி விளையாடச் சொல்வார். அவர் மைண்ட் செட் குறித்து நிறைய பேசுவார். பேட்டிங் செய்ய களத்திற்கு செல்லும் போது நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்ற அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement