
Virat Kohli smashes Sachin Tendulkar's spectacular record in Australia during IND vs BAN encounter a (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்து வருவது விராட் கோலியின் பேட்டிங். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு படுமோசமான பார்மில் இருந்த விராட் கோலி மனதளவிலும் தனது பேட்டிங்கில் மீண்டும் வேற லெவலாக மாறியுள்ளார்.
குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று அரைசதங்கள் அடித்திருக்கிறார். இந்த மூன்றிலும் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் இருந்தது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்தது, இதுவரை விராட் கோலி விளையாடியதில் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் என்று சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பாராட்டினர். அடுத்ததாக நெதர்லாந்து அணிக்கு எதிராக 62 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த வங்கதேசம் அணிக்கு எதிராக 64 ரன்கள் என டாப் ஃபார்மில் இருக்கிறார்.