தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சிக்கல் குறித்து தான் இதில் விவாதிக்க உள்ளோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு சீசனில் விராட் கோலி 3 முறை கோல்டன் டக் ஆகி இருக்கிறார். எப்போதும் போல் அரைசசதம், சதம் என வேகமாக அடிக்கும் அந்த பழைய ஆட்டம் தற்போது வரை கோலியிடமிருந்து வரவில்லை.
தொடர்ந்து ஸ்டம்பிற்கு இன்ஸ்விங் ஆகும் பந்து மற்றும் சுழற்பந்துவீச்சில் ஸ்டம்பை நோக்கி திரும்பும் பந்தை கணிப்பதில் கோலிக்கு சிக்கல் இருக்கிறது. இதற்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டால், அதனை கணிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். ஆனால் பேட்டிங் நுணக்கங்களை மாற்றி அந்த பிரச்சினையை எளிதில் சமாளித்துவிடலாம்.
Trending
கோலியும், அதை தான் செய்கிறார். ஏனெனில் நேற்றையஆட்டத்தில் பழைய விராட் கோலியின் பேட்டிங்கை காண முடிந்தது. பஞ்சாப்க்கு எதிராக ஆட்டத்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என 14 பந்துகளில் 20 ரன்களை தொட்டார் கோலி. அதன் பிறகு ரபாடா வீசிய ஷாட் பாலை பின்நோக்கி அடிக்க முயன்ற போது கேட்ச் ஆனார்.
இது முழுக்க, முழுக்க கவன குறைவிலும், கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பதால் நடக்கும் விசயம். ஆனால், அதற்கு கோலி உலகமே இடிந்தது போல் வானத்தை நோக்கி கையில் சைகை செய்வது போன்ற காரியங்களை செய்வது தான் இடங்கே தவறு. இதன் மூலம் விராட் கோலி தன்னை தானே தண்டித்து கொள்கிறார். பொறுமை இழந்ததை விராட் கோலியே உலகத்திற்கு காட்டுகிறார்.
உண்மையில், கோலி ஃபார்மில் இல்லாமல் இருந்தது உண்மையே, ஆனால் நேற்று பழைய கோலி போல் ஆடியதும் உண்மையே. கிரிக்கெட்டில் ஃபார்ம்க்கு திரும்புவது ஒரு Slow Process, மெதுவாக தான் நிகழும். அதற்குள் நாம் இப்போ ராமசாமி மாதிரி இப்போவே நடக்கனும் என்று நினைத்து பொறுமை இழந்தால், அது நமக்குள் இருக்கும உத்வேகத்தை அழித்து மேலும் சரிவை தான் தரும். விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் இருந்த பாசிட்டிவ்வை மட்டும் பார்க்க வேண்டும். தனக்கு தானே தட்டி கொடுத்து வெல்டன் கோலி, அடுத்த மேட்சை பார்த்துக்கலாம் என்று சொல்வது தான் அவர் இப்போது செய்ய வேண்டிய விசயம்.
Win Big, Make Your Cricket Tales Now