
Virat Kohli To Sit Out 3-Match ODI Series Against South Africa: Reports (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17ஆம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதை பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.