-mdl.jpg)
Virat Kohli Will Do Something Extraordinary In World Cup, Says Sreesanth (Image Source: Google)
இந்திய அணியில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 2011ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக விளையாடினார். மிரட்டலான வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், இந்தியாவிற்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 87, 75 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளையும் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வெகுசில வீரர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர்.
தனது அதிவேகமான பந்துவீச்சாளும், துல்லியமான யார்க்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் ஸ்ரீசாந்த். ஆனால் கடந்த 2013 ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்ற அவரது கெரியர், அத்துடன் முடிவுக்கு வந்தது.