Advertisement

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை நாயகன் விராட் கோலி!

இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

Advertisement
Virat Kohli’s remarkable decade in Test cricket
Virat Kohli’s remarkable decade in Test cricket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2021 • 11:45 AM

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டன் என்ற புகழுக்கு சொன்ந்தக்காரர் விராட் கோலி. இவர் கடந்த ஜூன் 20, 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2021 • 11:45 AM

அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களுக்கும் விராட் கோலி அவுட்டானார். ஆனால் அப்போது யாருக்கும் தெரியாது வருங்காலத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த கேப்டனாகவும் கோலி உருவெடுப்பார் என்று. 

Trending

இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ஆவது நாளான நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, அதில் 61 போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மொத்தம் 7,534 ரன்களை குவித்துள்ளார். அவருடைய ஆவரேஜ் 52.31 ஆக இருக்கிறது. 

மேலும் இந்த 10 ஆண்டுகளில் 27 சதங்களை விளாசியுள்ளார். அதில் 14 சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடிக்கப்பட்டவை. அத்துடன் 7 முறை இரட்டை சதங்களும், 25 அரை சதங்களும் விளாசியுள்ளார் கோலி. 2016 ஆம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1,215 ரன்களை குவித்தார் கோலி. 

அதேபோல ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய அணியில் அதிகபட்ச ஆவரேஜ் வைத்திருக்கும் பேட்ஸ்மேன் கோலி மட்டுமே. 2018ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் பெற்றார் கோலி. 

மேலும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 2017, 2018, 2019 என தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் கோலி. கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் விராட் கோலி 2020-ஆம் ஆண்டும் ஐசிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் தலைச்சிறந்த பேட்ஸ்மேன் என அங்கீகரிக்கப்பட்டு "சர் கேரிபீல்டு சோபர்ஸ்" விருதும் வழங்கி கவுரவித்தது ஐசிசி. 2014 ஆஸ்திரேலிய தொடரில் இருந்து கேப்டனாக தோனி விலகியதை அடுத்து, அப்போது முதல் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement