ஐபிஎல் 2022: மும்பை ரசிகர்களிடம் சிக்கிய சேவாக்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விரேந்திர சேவாக் போட்ட வடபாவ் ட்வீட் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
மும்பை - கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி இன்னும் எந்த ரசிகராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 162 ரன்கள் இலக்குடன் 5 விக்கெட்களை இழந்திருந்த கொல்கத்தா அணி, ஒரே ஓவரில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றி அமைத்தது.
அந்த அணிக்கு கடைசி 37 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது. முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட் என்ற நிலை. அப்போது வந்த பாட் கம்மின்ஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, மும்பைக்கு அதிர்ச்சி தந்தார். அதிலும் டேனியல் சாம்ஸ் வீசிய 16 ஓவரில் மட்டும் 6,4,6,6,N2,4,6 என மொத்தமாக 35 ரன்களை பறக்கவிட்டார். இதனால் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் எல்லாம் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்து வெற்றி அபார வெற்றி பெற்றது.
Trending
மிகவும் எளிதாக வெற்றி பெற வேண்டிய மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் 5ஆவது முறையாக, தொடரின் முதல் 3 போட்டியில் தோல்வியடைந்தது. இதன் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மாவே கோபத்துடன் காணப்பட்டார். மேலும் ரசிகர்களும் கிண்டலடித்து வந்தனர்.
இந்நிலையில் விரேந்திர சேவாக் ஒருபடி மேல் சென்றுவிட்டார். இதுகுறித்து ட்வீட் போட்டிருந்த அவர், " சிறப்பாக விளையாடிய பாட் கம்மின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து வடபாவை பறித்துவிட்டது” என கிண்டலடித்திருந்தார். குறிப்பாக ரோஹித் சர்மாவை தாக்கும் விதமாக அது அமைந்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேவாக்கை மும்பை ரசிகர்கள் மிக மோசமாக விமர்சித்தனர். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே தனது ட்வீட்டில், வடபாவ் என மும்பை நகரத்தை தான் குறிப்பிட்டேன். உங்களை விட நான் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கிற்கு பெரிய ரசிகன் என விளக்கமளித்திருந்தார். இது தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now