ஐபிஎல் 15ஆவது சீசனில் 2ஆவது நாக் அவுட் போட்டி வரை வந்த ஆர்சிபி அணி, ராஜஸ்தானிடம் தோற்று வெளியேறியது. முக்கியமான இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 157 ரன்கள் மட்டுமே அடிக்க, 158 ரன்கள் என்ற இலக்கை பட்லரின் சதத்தின் உதவியுடன் எளிதாக அடித்து ராஜஸ்தான் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது. ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறியது.
இந்த முக்கியமான நாக் அவுட் போட்டியில் விராட் கோலி 7 ரன்கள் மட்டுமே அடித்தார். விராட் கோலிக்காக இந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள் சிலரே கூட விரும்பினர். ஆனால் அதற்கு கோலி நன்றாக பேட்டிங் ஆட வேண்டும் அல்லவா? அதை கோலி செய்யவில்லை.
இந்த சீசனில் 16 போட்டிகளில் பேட்டிங் ஆடிய விராட் கோலி வெறும் 116 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 341 ரன்கள் மட்டுமே அடித்தார். முக்கியமான நாக் அவுட் போட்டியிலும் 7 ரன் மட்டுமே அடித்தார்.