
Virender Sehwag TROLLED Over ‘Chamiya’ Remark to Virat Kohli’s Viral Dance During 5th Test at Edgbas (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களை சேர்க்க, இங்கிலாந்து அணி 284 ரன்களுக்குள் சுருண்டது.
டெஸ்ட் கிரிக்கெட் என்றால் விராட் கோலியின் சர்ச்சை என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த போட்டியிலும் கோலி சண்டைகள் பார்க்க முடிந்தது. இங்கிலாந்து அணி இன்னிங்ஸின் போது, ஜானி பேரிஸ்டோ மற்றும் கோலி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.