Advertisement

இலவச டிக்கெட்டுகள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் - விரேந்திர சேவாக்!

உலக கோப்பையின் மீதமுள்ள எல்லா போட்டிகளுக்கும் மைதானங்களுக்கு மக்களை வரவழைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய ஆலோசனையை முன் வைத்திருக்கிறார்.

Advertisement
இலவச டிக்கெட்டுகள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் - விரேந்திர சேவாக்!
இலவச டிக்கெட்டுகள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் - விரேந்திர சேவாக்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 05, 2023 • 06:50 PM

உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தை இந்தியா செலுத்தி வருகிறது. அதன் ஒரு அடையாளமாக உலகத்திலே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் அகமதாபாத் நகரில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் முக்கியமான போட்டிகள் அனைத்தும் அகமதாபாத் மைதானத்திற்கு சமீபக் காலத்தில் ஒதுக்கப்பட்டு வருகிறது. மைதானத்தின் வசதிகள் வீரர்களுக்கு மிகுந்த சௌரியத்தை கொடுக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 05, 2023 • 06:50 PM

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவில் தற்பொழுது துவங்கப்பட்டு இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டம் குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேலும் இந்த மைதானத்திற்கு உலகக் கோப்பையின் லீக்ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னாள் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐ விரும்புகிறது.

Trending

ஆனால் எதார்த்த நிலைமையோ வேறாக இருக்கிறது. இன்று உலகக்கோப்பை துவக்க போட்டிக்கு குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்களின் வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை விட, எதிர்பாராத அளவுக்கு மிக மோசமாக இருக்கிறது. தற்பொழுது சமூக வலைதளங்களில் இது குறித்து ரசிகர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பிசிசிஐக்கு பதிவு செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் உலக கோப்பையின் மீதமுள்ள எல்லா போட்டிகளுக்கும் மைதானங்களுக்கு மக்களை வரவழைப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய ஆலோசனையை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சேவாக், “மக்கள் வேலை நேரம் முடிந்து மைதானத்திற்கு வருவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இந்தியா விளையாடாத போட்டிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட்டில் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகின்ற காரணத்தினால், இளைஞர்கள் மைதானத்திற்கு வருவதற்கு இது நிச்சயம் உதவி செய்யும். ஒரு உலகக்கோப்பை போட்டியில் வீரர்கள் மக்களின் முன்னால் விளையாடுவதற்கு இதுதான் வழி” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement