
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், இங்கிலாந்தை சேர்ந்த மொயின் அலி.
மொயின் அலி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விசாவுக்கு விண்ணப்பித்தார். பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஒரிரு நாளில் எவ்வித கேள்விகளும் இன்றி விசா கிடைத்துவிடும். ஆனால் மொயின் அலிக்கு 20 நாட்கள் ஆகியும் விசா கிடைக்கவில்லை. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. அரசியல் காரணங்களுக்காக தான் மொயின் அலிக்கு விசா வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.
மொயின் அலி இந்தியாவுக்கு அடிக்கடி வந்து விளையாடும் கிரிக்கெட் வீரர், அவருக்கு விசா கிடைக்காதது மோசம் என்று அவரது தந்தை முனிர் அலி குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து, சிஎஸ்கே அணி நிர்வாகம், பிசிசிஐயிடம் புகார் அளித்து, விசா கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.