லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்களுடன் தற்காலிக பயிற்சியாளரான விவிஎஸ் லக்ஷ்மன் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி அயர்லாந்து செல்கிறது. வரும் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் 15 ஆம் தேது அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது. அயர்லாந்து தொடருக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து செல்லும் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் இல்லை. ராகுல் டிராவிட் மற்றும் அவரது தலைமையிலான பயிற்சியாளர்கள் தற்போது அமெரிக்காவில் இருக்கின்றனர். அமெரிக்காவில் புளோரிடாவில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் 5ஆவது டி20 போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அமெரிக்காவில் இருக்கின்றனர்.
Trending
இதன் காரணமாக அயர்லாந்து செல்லும் இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவர் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் என்று தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, சிதான்ஷு கோடக் மற்றும் சாய்ராஜ் பஹுதுலே போன்ற சில பயிற்சியாளர்கள் துணை ஊழியர்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
இந்த அணி இரண்டு தனித்தனி குழுக்களாக டப்ளினில் கூடும். கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்காக தற்போது மியாமியில் இருக்கும் ஒரு பேட்ச், அமெரிக்காவில் இருந்து பயணிக்கும். பும்ராவும் மற்ற குழுவினரும் வரும் 15ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து விமானம் மூலமாக அயர்லாந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now