
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக மொகாலி மைதானத்தில் துவங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடும் 12-வது வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி தற்போது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நூறாவது போட்டிக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
இதுகுறித்து விவிஎஸ் லக்ஷ்மண் கூறுகையில், “இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. அந்த சாதனையை படைக்க இருக்கும் விராட் கோலிக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது 2011-ம் ஆண்டு அவர் அறிமுக போட்டியில் விளையாடியதில் இருந்து தற்போது வரை ஒரே மனநிலையுடன் தான் உள்ளார். அவருடைய பேட்டிங் திறனுக்கு காரணமே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதன்மூலம் முன்னேற்றத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர் விராட் கோலி .