
இலங்கை அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயன டி20 தொடரானது டிசம்பர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அடுத்தமாதம் ஜனவரி 05ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சரித் அசலங்கா தலைமையிலான இந்த இலங்கை அணியில் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சண்டிமால், பதும் நிஷங்கா, வநிந்து ஹசரங்கா, மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷனா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இருப்பினும் இந்த அணியில் துனித் வெல்லாலகேவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணியில் இளம் அதிரடி வீரர் பெவோன் ஜேக்கப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டாம் லேதம், வில்லியம் ஓ ரூர்க் மற்றும் வில் யங் உள்ளிட்டோருக்கு ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.