
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்துள்ளார்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணியும், ஒருநாள் தொடரை வங்கதேச அணியும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இத்தொடருக்கான இலங்கை அணியில் வநிந்து ஹசரங்காவும் சேர்க்கப்பட்டிருந்தார்.