Advertisement

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா; பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய இலங்கை கிரிக்கெட் வாரியம்!

இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா நடப்பு சீசனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா; பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய இலங்கை கிரிக்கெட் வாரியம்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா; பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய இலங்கை கிரிக்கெட் வாரியம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 06, 2024 • 07:56 PM

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆர்சிபி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளதுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 06, 2024 • 07:56 PM

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Trending

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இலங்கை அணியும், ஒருநாள் தொடரை வங்கதேச அணியும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக வநிந்து ஹசரங்கா இடம்பிடித்து விளையாடி வந்தார். 

இந்நிலையில் இத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ஒப்பந்தம் செய்தது. தற்போது ஹசரங்கா தொடரிலிருந்து விலகியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஹசரங்கா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா நடப்பு சீசனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இடது குதிங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement