அரையிறுதிக்கு முன் பந்துவீச தயாராகிவிடுவேன் - ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக் கோப்பைப் தொடரின் அரையிறுதிக்கு முன்பு பந்துவீசத் தயாராகி விடுவேன் என இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது.
இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான். துபாய் சா்வதேச மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது.
Trending
இப்போட்டி முடிவுக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “எனது முதுகு வலி குணமடைந்துள்ளது. இப்போதைக்குப் பந்து வீச மாட்டேன். அரையிறுதிக்கு முன்பு பந்துவீச விருப்பப்படுகிறேன். நான் எப்போது பந்துவீசலாம் என மருத்துவக் குழுவினரிடம் விவாதித்து முடிவுக்கு வருவோம்” என்று தெரிவித்தார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
முன்னதாக நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now