Advertisement
Advertisement
Advertisement

பிளேயிங் லெவனில் யாரை தேர்வு செய்வது என்பது குழப்பாக உள்ளது - ரோஹித் சர்மா!

இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் உள்ளது என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 28, 2022 • 14:33 PM
Want to understand what kind of bench strength we have, says Rohit Sharma after T20I series whitewas
Want to understand what kind of bench strength we have, says Rohit Sharma after T20I series whitewas (Image Source: Google)
Advertisement

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 க்கு 0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “இந்த தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த தொடரில் கிடைத்த வெற்றி மூலம் பாசிட்டிவான நிறைய விடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Trending


நம் அணியின் பெஞ்ச் வலிமை என்ன என்பது இந்த தொடரின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. அணியில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த தொடரில் வாய்ப்புக்காக காத்திருந்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.

எந்த இடத்தில் உங்களை அணி களமிறக்குகிறது என்பதை கணக்கில் கொண்டு கவலை கொள்ள வேண்டாம். எந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட தயாராக இருக்க வேண்டும். இந்த சிறப்பான செயல்பாட்டை அப்படியே தொடர விரும்புகிறோம். மேலும் தற்போது உள்ள இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் உள்ளது. அந்த அளவிற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement