
'Want to win this series for India': Prithvi Shaw (Image Source: Google)
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 18 அன்று கொழும்புவில் தொடங்குகிறது.
இத்தொடருக்காக இரு அணி வீர்ரகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நீண்ட நாளைக்கு பிறகு தனது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் பிரித்வி ஷா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரித்வி ஷா, “நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் என் மனத்தில் உள்ளது. இந்தியா அல்லது வேறு எந்த அணியில் நான் விளையாடினாலும் அணியின் வெற்றி தான் எனக்கு முக்கியம். இந்திய அணிக்காக இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.