
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் வார்னர் சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்தார். மேத்யூ வேட் 19வது ஓவரில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பவுலிங்கில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி போட்டியை முடித்தார்.
அந்த போட்டியில் வார்னர் அடித்த ஒரு சிக்ஸர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது, முகமது ஹஃபீஸ் வீசிய 8ஆவது ஓவரின் முதல் பந்து அவரது கையிலிருந்து வழுக்கிக்கொண்டு சென்றதால், இரண்டு முறை பிட்ச் ஆனதுடன் லெக் ஸ்டம்பை விட்டு வெகுதூரம் விலகி வெளியே சென்றது.