என்னை பாகிஸ்தானி என்றும் மட்டுமே சொல்ல வேண்டாம் - வக்கார் யூனிஸ்!
நான் தற்போது பாதி ஆஸ்திரேலியன். நான் பாகிஸ்தானி மட்டும் கிடையாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் நகைச்சுவைராக கூறியுள்ள்ளர்.
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நேற்று பெங்களூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 367 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை 305 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் முதல் 35 ஓவர்களில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களை கொடுத்தார்கள். ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை தவம்சம் செய்து விட்டார்கள். அதற்குப் பிறகு கடைசி 15 ஓவர்களில் திரும்பி வந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ரண்களை கட்டுப்படுத்தியதோடு ஆஸ்திரேலியா விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அவர்களை 367 ரன்களில் நிறுத்தினார்கள்.
Trending
நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாமல் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணியாக மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தது. இந்தப் போட்டிக்கான ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் சேன் வாட்சன் மற்றும் ஆரோன் பின்ச் இருவருக்கும் மத்தியில் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் வர்ணனையாளராக பங்கு பெற்று இருந்தார்.
#AUSvPAK #Australia #WorldCup2023 #CWC23 #Pakistan pic.twitter.com/U2BN9OBNb3
— CRICKETNMORE (@cricketnmore) October 21, 2023
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்களோடு பாகிஸ்தானின் வக்கார் யூனிசும் சேர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது “நான் தற்போது பாதி ஆஸ்திரேலியன். நான் பாகிஸ்தானி மட்டும் கிடையாது. என்னை பாகிஸ்தானி என்றும் மட்டுமே சொல்ல வேண்டாம்” என்று நகைச்சுவையாக கூறினார். இவரது பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now