Advertisement

ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!

களத்திற்கு வெளியே டெவான் கான்வே செலவிடும் நேரத்தையும் எப்போதுமே விரும்புவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 20, 2023 • 22:27 PM
“Was My 50th Game For This Franchise, Feels Good To Make A Contribution” – Ruturaj Gaikwad!
“Was My 50th Game For This Franchise, Feels Good To Make A Contribution” – Ruturaj Gaikwad! (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைந்து, பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும் ருதுராஜ் 79 ரன்களையும் துபே 22 ரன்களையும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 86 ரன்களை எடுத்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களையும் தீக்‌ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Trending


இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 12ஆவது முறையாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

விருது பெற்றபின் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “இது கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி. சென்னை அணிக்காக என்னுடைய 50ஆவது போட்டியும் கூட. இப்படி ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி. குறைவான தூரமுடைய பவுண்டரிகளை டார்கெட்டாக வைத்து ஆடினேன்.

கான்வேக்கு சில ஏரியாக்களில் முன்னேற்றமடைய வேண்டிய தேவை இருந்தது. அவரும் நிறையவே முன்னேறியிருக்கிறார். சென்னையில் ஆடுவது ரொம்பவே கஷ்டம். ஆனால், அவர் அந்த சூழலுக்கு தன்னை சிறப்பாக தகவமைத்துக் கொண்டார். அவர் எப்போதும் உரையாடலுக்கு தயாராக இருப்பார். களத்திற்கு வெளியே அவருடன் செலவிடும் நேரத்தையும் எப்போதுமே விரும்புவேன்" என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement