கவாஜா தொடரின் முதலிலிருந்து விளையாடாதது ஆச்சரியம் - ஜோ ரூட்
உஸ்மான் கவாஜா தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது.
மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இதற்கிடையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நீண்ட போராட்டத்திற்கு பிறகு போட்டியை டிரா செய்தது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஹாபர்ட்டில் தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளரகளைச் சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூ, உஸ்மான் கவாஜா தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜோ ரூட், “உஸ்மான் கவாஜா தொடரைத் தொடங்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தனிப்பட்ட முறையில், அவர் ஒரு அற்புதமான வீரர் என்று நான் நினைக்கிறேன்.
அவர் தனது கேரியரின் ஒரு காலகட்டத்தில் இருக்கிறார், அங்கு அவர் தனது விளையாட்டில் மிகவும் திருப்தியாக இருக்கிறார், அவர் எப்படி விளையாட விரும்புகிறார் என்பது பற்றிய புரிதல் அவருக்கு உள்ளது, மேலும் இந்த கடைசி ஆட்டத்தில் அவரை அமைதியாக வைத்திருக்க எங்களுக்கு சில வேலைகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துடனாக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய உஸ்மான் கவாஜா, இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி தனது கம்பேக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now