
Washington Sundar Comes Up With A Hilarious Response After SRH Pacer T Natarajan Asks “Do You Miss R (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை முழுக்க முழுக்க இந்தியாவில் போட்டிகள் நடைபெறுகிறது.
அனைத்து அணி வீரர்களும் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துவிட்டு, தற்போது கடைசிகட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும், வீரர்களின் பயிற்சி காணொளி, ஹோட்டல் காணொளி, நேர்க்காணல் செய்வது போன்ற பல காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிடும். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தமிழக வீரர்களை குறிவைத்து ஒரு ஸ்பெஷல் காணொளியை வெளியிட்டுள்ளது. அந்த அணி இந்த முறை வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் இருவர் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது.