Advertisement

ஜிம்பாப்வே தொடரில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது சந்தேகம்?

கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 12, 2022 • 12:48 PM
Washington Sundar injures shoulder ahead of Zimbabwe tour
Washington Sundar injures shoulder ahead of Zimbabwe tour (Image Source: Google)
Advertisement

இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்று வெற்றிகளை குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18, 20, 22ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய இளம் அணி களமிறங்கவுள்ளது.

இதற்கு ஷிகர் தவன் தான் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது, கேஎல் ராகுல் பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சியடைந்துவிட்டார் எனக் கூறி ராகுலை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தவன் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Trending


இந்நிலையில் நீண்ட நாட்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடர் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளனர். இதனால், இவர்தான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிக கவனம் பெற்றுள்ளது வாஷிங்டன் சுந்தர்தான்.

சுந்தர் தற்போது இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். அத்தொடரில் சுந்தர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களை குவித்து வருகிறார். மேலும், பேட்டிங்கிலும் அவ்வபோது ஓரளவுக்கு பெரிய ஸ்கோர்களை அடித்து வருகிறார். இதனால்தான், இவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

சுந்தர் அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்காது எனக் கருதப்பட்டது. இந்நிலையில், கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையாக கொண்டுதான் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அக்ஸர் படேலின் இடத்தை மீண்டும் சுந்தர் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கருதப்பட்டது.

இந்நிலையில் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

சுந்தர் இப்படி அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு விலகுவதாலும், அணியில் ஏற்கனவே ஸ்பின்னர்களுக்கான போட்டி அதிகம் இருப்பதாலும் இனி சுந்தருக்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன் (துணைக் கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சல் படேல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சஹார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement