Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: ஓரே ஒவரில் டெல்லியை காலி செய்த வாஷிங்டன் சுந்தர்!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் .

Bharathi Kannan
By Bharathi Kannan April 24, 2023 • 20:49 PM
Washington Sundar Picks 3 Wickets In One Over Against Delhi Capitals
Washington Sundar Picks 3 Wickets In One Over Against Delhi Capitals (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளைடிவருகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் இந்த 2 அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.

முதல் 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2ஆவது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். 

Trending


அதன்படி முதலில் பேட்டிங் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, அதன்பின்னர் வார்னரும் மிட்செல் மார்ஷும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 15 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் தொடக்க வீரர் வார்னருடன் சர்ஃபராஸ்கான் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த நிலையில், 8ஆவது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், அந்த ஓவரில் வார்னர்(21), சர்ஃபராஸ் கான்(10) மற்றும் அமான் கான் (4) ஆகிய மூவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்திலிருந்து டெல்லியை வெளியேற்றினார். இதனால் 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தடுமாறியது. 

இதையடுத்து ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே மற்றும் அக்ஸர் படேல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement