Washington Sundar to return to action with Syed Mushtaq Ali Trophy (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடரின் நடப்பாண்டு சீசன் அக்டோபர் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருகாக ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக் குழுவால் சயீத் முஷ்டாக் அலிக்கான தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், விஜய் சங்கர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் 2-ம் பகுதியில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படாத ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் தமிழ்நாடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.