பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி; மறுப்பு தெரிவித்த வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, தான் ஆர்வம் காட்டுவதாக பரவிய தகவலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவருகின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்தன.
Trending
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு தான் ஆர்வம் காட்டுவதாக வெளியான தகவலை வாசிம் அக்ரம் திட்டவட்டமாக மறுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அவரது பதிவில், “இது போன்ற தவறான தகவல்களை யாரும் பரப்பாதிர்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி என்பது நிபுணத்துவம் வாய்ந்த பதவி. அதற்கு நான் ஆசைப்பட்டதே இல்லை. நான் என் வாழ்வில் இப்போதிருக்கும் நிலையிலேயே திருப்தியாக உள்ளேன். அதற்கு கடவுளுக்கு நன்றி” என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now