
உலகக்கோப்பை என்று எடுத்துக் கொண்டால் இந்திய அணிதான் மிக அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்திய அணியாக இருந்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் அணி ஒரே ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. அதுவும் டி20 உலகக் கோப்பையில் 2021 ஆம் ஆண்டுதான் நடந்தது. அதை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி செய்தது.
இதுவரை ஏழு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் மோதி ஏழுமுறையும் இந்திய அணியை வெற்றி பெற்று இருக்கிறது. எட்டாவது முறையாக வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோத இருக்கின்றன.
இதன் பொருட்டு பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இரு அணி வீரர்களையும் சேர்த்து தனது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை தேர்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். இந்த அணியில் அவர் தொடக்க வீரர்களாக சையத் அன்வர் மற்றும் முதல் பந்தில் இருந்தே அடித்து நொறுக்கும் பிளாஸ்டர் வீரேந்திர சேவாக் இருவரை வைத்திருக்கிறார்.