Advertisement

ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!

பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஃபிட்னஸ் சோதனைகள் செய்யப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 16, 2023 • 05:42 PM

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்கள் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 154 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 16, 2023 • 05:42 PM

இதனால் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சரியான திட்டத்துடன் களமிறங்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே 8ஆவது முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களை கடந்த இரு நாட்களாக ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

Trending

இந்த நிலையில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற வாசிம் அக்ரம், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஃபிட்னஸ் சோதனை கிடையாது என்று சில உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த விவாதத்தில் வாசிம் அக்ரம் பேசுகையில், “பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்து கவலை அளிக்கிறது. தற்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த ஃபிட்னஸ் சோதனைகளும் வைக்கப்படுவதில்லை. 

மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழு தலைவராக இருந்த போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு சீரான இடைவேளையில் யோ-யோ சோதனையை நடத்தினார். என்னை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட் விளையாடும் வீரர்கள், ஒவ்வொரு மாதமும் ஃபிட்னஸ் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு யோ-யோ சோதனை செய்யவில்லை என்றால், இதுபோன்ற தோல்விகள் தான் அடைவார்கள். 

அதேபோல் கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக 3 பேர் மாறியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு, அடுத்த தொடரில் இருப்போமா என்பதே பெரிய தலைவலியாக இருக்கும். இப்போதும் பாகிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததை நினைத்து பார்க்கும் போது ஏமாற்றமாக இருகிறது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement