Advertisement

SA vs IND: ஷர்துலை புகழ்ந்து தள்ளும் வாசிம்; ஆகாஷ்!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் ஷர்துல் தாக்கூரை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, வாசிம் ஜாஃபர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Advertisement
Wasim Jaffer compares 'Lord' Shardul Thakur to cricketing greats after 2nd Test
Wasim Jaffer compares 'Lord' Shardul Thakur to cricketing greats after 2nd Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 05, 2022 • 08:04 PM

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 05, 2022 • 08:04 PM

இதனையடுத்து ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் சீரிஸை வெல்லும் நோக்கோடு சீரியசாக களத்தில் இறங்கியது தென் ஆபிரிக்கா. இந்தப் போட்டியிலும் டாசை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே இந்திய வீரர்கள் சறுக்கியதால் 202 ரன்களை மட்டுமே இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் எடுத்தது.

Trending

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த தென் ஆபிரிக்க வீரர்கள் இந்திய அணியின் அசுரத்தனமான பந்துவீச்சை நேர்த்தியாக ஆடத் தொடங்கினர். துவக்க வீரர் மார்க்ரம் 7 ரன்னில் வெளியேறினாலும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் – கீகன் பீட்டர்சன் ஜோடி இந்திய பவுலர்களின் பொறுமையை சோதித்தது.

அப்போது ஷர்துல் தாக்குரிடம் பந்தைக்கொடுத்தார் கேப்டன் ராகுல். அதன் பலனாக தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் கூட்டணிக்கு குண்டு வைத்தார் தாக்கூர். எல்கர், பீட்டர்சன், டுசன் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தார் தாக்கூர்.

அதுமட்டும் இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறும் போது டெய் எண்டராக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அபாரமாக விளையாடி 28 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து ஷர்துல் தாக்கூருக்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து வாசிம் ஜாஃபர், நேற்று பந்துவீச்சில் 7 விக்கெட்டுகள்; இன்று சிறப்பான கேமியோ என்று மீம்ஸ் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். 

 

அதேபோல் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, இந்த பிரபஞ்சத்தில் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று பதிவிட்டு ஷர்துல் தாக்கூரின் புகைப்படத்தை இணைத்துள்ளார். தற்போது இவர்களது கருத்துகள் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement