
ஐபிஎல்லில் இந்தியாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பலர் அசத்திவரும் நிலையில், டி20 உலக
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு ஐபிஎல்லை இளம்வீரர்கள் பலரும் அருமையாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் என பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. டி20 உலக கோப்பை ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நடப்பதால், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டைத்தான் மிகவும் கவனமாக சிறந்தவர்களை தேர்வு செய்ய வேண்டிய கடமை இந்திய அணிக்கு உள்ளது.
பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூன்று சீனியர் பவுலர்களும் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில், இந்த சீசனில் மற்றொரு சீனியர் பவுலரான உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசிவருகிறார். ஹர்ஷல் படேல், டி.நடராஜன் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி தாங்கள் சார்ந்த அணிகளுக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.