ரசிகையை தாக்கிய சஞ்சு சாம்சனின் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகையின் முகத்தை தாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றி ஜஹென்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 120 ரன்களையும், சஞ்சு சாம்சன் 109 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அந்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டபஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். பின் மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Trending
பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கோ ஜான்சன் 29 ரன்களைச் சேர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது. மேலும் சதமடித்து அசத்திய திலக் வர்மா, தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த ஒரு ரசிகையின் முகத்தை தாக்கிய காணொளியானது இணையத்தில் வரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசினார். அந்த நிலையில் அவரை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
Wishing a quick recovery for the injured fan!
— JioCinema (@JioCinema) November 15, 2024
Keep watching the 4th #SAvIND T20I LIVE on #JioCinema, #Sports18 & #ColorsCineplex #JioCinemaSports pic.twitter.com/KMtBnOa1Hj
Also Read: Funding To Save Test Cricket
இதற்கிடையில், அவரது பேட்டில் இருந்து வந்த இரண்டாவது சிக்ஸர் மிக வேகமாக எல்லையை நோக்கி சென்றது, இதனால் மைதானத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பந்து அவரது கன்னத்தில் பலமாக தாக்கியது. இந்த சம்பவத்தின் போது, ஒருபுறம் பந்து மிக வேகமாக இருந்தாலும், மறுபுறம் அந்த ரசிகை பந்தை கவணிக்காததே இந்த விபத்திற்கு காரணம். மேலும் பந்து தாக்கியதன் காரணமாக அந்த ரசிகை வலியால் கதறி அழுத கணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now