
நடப்பு ஆண்டில் டி20 உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், இந்தியா - இங்கிலாந்து தொடர் என பல கிரிக்கெட் தொடர்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. இந்நிலையில் இந்த ஆண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 5 பந்துவீச்சாளர்களை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
அதன்படி 2021ஆம் ஆண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினை இந்த லிஸ்ட்டில் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இவ்வளவுக்கும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாமலேயே 52 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார்.
இந்த பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை தேர்வு செய்துள்ளார் சோப்ரா. ஒவ்வொரு ஆண்டுமே டாப் 5 டெஸ்ட் பவுலர்களில் இடம்பெற தகுந்த பவுலரான ஆண்டர்சன், 2021ஆம் ஆண்டு 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.