
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களையும் குவித்தனர்.
இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல் சமத்தும் 10 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களைக் குவித்ததுடன், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணி எனும் தங்களுடைய முந்தைய சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை படைத்தது.
அதன்பின் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் டூ பிளெசிஸ் 62 ரன்களும், கோலி 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ், ராஜத் பட்டிதார், சௌரவ் சௌகான் போன்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் ஆரிச்பி அணி 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.